_638588bc310cb.jpg)
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடா அனுப்புவதாக கூறி 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை பெற்று ஏமாற்றி விட்டதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணத்தினை பெற்று 8 மாதங்களாகியும் கனடாவிற்கு அனுப்ப அனுப்பாமலும், பெற்றுக்கொண்ட பணத்தை வழங்காமல் இருந்த காரணத்தினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 55 இலட்சம்,மற்றும் 44 லட்சத்து 35 ஆயிரம் ரூபா பணத்தினை பெற்றுவிட்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்து ,கடந்த வாரம் மேலும் இருவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.