உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இலங்கைத் தமிழன்!

FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு வருகை தாருங்கள் என்ற பதாதையுடன் நின்ற இலங்கை இளைஞன் அங்கிருந்த பார்வையாளர்களின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டாரில் FIFA உலகக் கிண்ண போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை ஓரளவேனும் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை இலங்கைக்கு வருகை தர வைக்கும் நோக்கில் இலங்கையை சேர்ந்த கட்டாரில் பணிபுரியும் நவரட்னம் தனரூபம் என்ற இளைஞன் பார்வையாளர் அரங்கில் “இலங்கைக்கு வருகை தாருங்கள்” என்ற வாசகத்துடன் கூடிய அட்டையினை கையில் ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் குறித்த போட்டியினை காணச்சென்ற கால்ப்பந்தாட்ட ரசிகர்களின் கவனம் முழுவதையும் குறித்த இளைஞன் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டதுடன் அங்கிருந்த ரசிகர்கள் இளைஞனுக்கு தமது ஆதரவினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *