கொழும்பு – காலி முகத்திடல் பகுதியிலுள்ள கொடி கம்பத்திற்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் சில காலமாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், நேற்று (28) காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் இதற்கு முன்னரும் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது