
அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைக்கு சர்வதேச தலையீடு கட்டாயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஒன்றுசேர வலியுறுத்தியுள்ளது.
அதிகார பகிர்வு தொடர்பில் உரையாடல் நடத்துவதற்காக தமிழ் கட்சிகளுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்திற்கு முன்னர் இப்ப பிரச்சனைக்கு தீர்வு காண உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாக சர்வகட்சி கூட்டத்தை நடத்தவும் அவர் முன்வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியுடன் நடத்தப்பட உள்ள உரையாடலுக்கு சர்வதேச தலையீடு கட்டாயமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு தமது கட்சி கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே, கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதனும் ,கூட்டணியின் எம்.பி மனோ கணேசன் மேற்கூறியவாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச தலையீடு அவசியம் இது வரலாறு எமக்கு கற்றுத் தந்துள்ள பாடம். முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.
எனவே ஏதோ ஒரு வடிவில் சர்வதேச தலையீடு அவசியம் அதனை தட்டிக் கழிப்பதற்கு ஜனாதிபதி முற்பட்டால் தீர்வு திட்ட பேச்சுக்கள் ஆரம்பத்திலேயே குழம்பு என்றால் மனோ கணேசன்
மேலும் இது தொடர்பில் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில் தந்தை செல்வா காலம் முதல் தோற்றுப்போன பேச்சுக்கள் தான் இடம்பெற்றுள்ளனர் ஒப்பந்தங்கள் கிழித்தெரியப்பட்டுள்ளன. எனவே சர்வதேச தலையீடு அவசியம். குறிப்பாக இந்திய தலையீட்டை நாம் கோருகின்றோம். நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா
ஆகிய நாடுகள் நடுநிலைமை வகிக்கலாம். உலகப் பொதுமுறை என்பது தோல்வி கண்டுள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.