ஒரு தனிநபருக்கு பல்கலைக்கழக மாணவராக இருப்பதற்கான அதிகபட்ச கால எல்லை சட்டத்தால் நிர்ணயிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்பைப் பின்பற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் வேறு பல செயற்பாடுகளில் ஈடுபட்டு தமது கல்வியை புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அதிகபட்சம் ஒன்றரை வருடங்கள் படிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்றும், நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை படிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆலோசனைக்குப் பின்னர் இந்த பிரேரணை நாட்டில் சட்டமாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.