
கொழும்பு, காலி முகத்திடல் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்துவாரப் பகுதியில் உள்ள கொடி கம்பத்திற்கு அருகில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சில காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, 28ம் திகதியன்று வீடு திரும்பியதாகவும், அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உறவினர்களால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.