பிபில கனுல்வெல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் சில காலமாக மேற்கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் திருட்டை மெதகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நபர் போலி சாவியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை திருடி, மொனராகலை அதிமலே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்துமிடம் ஒன்றில் வைத்து திருடிய மோட்டார் சைக்கிள் பகுதிகளை வேறு மோட்டார் சைக்கிள்களில் இணைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
அதிமலே பகுதியில் திருட்டு மோட்டார் சைக்கிள்களை பகுதிகளாக கழற்றிய இருவரையும், கனுல்வெல பிரதேச மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்ட நபரையும் மெதகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் பாதிக்கப்பட்டோர் பலர் இதுவரை காலமும் போலீசாரிடம் பல முறைப்பாடுகளை முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.