ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான மின் உபகரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்களை பசறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
54.49.45.47வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் வீடொன்றின் பின்புறமாக நுழைந்து வீட்டில் உள்ள LED தொலைக்காட்சி, மின்அரைப்பான் , முற்கால சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை திருடிய குற்றச்சாட்டில் மௌசாகலை பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலும் சீமெந்து கல் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் உள்ள மின் இயந்திரங்கள் இரண்டையும் பித்தளை கம்பிகளையும் திருடிய குற்றச்சாட்டில் மேலும் இருவருமாக மொத்தமாக மௌசாகலை பகுதியைச் சேர்ந்த நால்வர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.