மருதமுனை அல்- .மனார் மத்திய கல்லூரியில் 1995 ஆம் ஆண்டு O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ‘முதலாம் ஆண்டு முதல் A/L வரை கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் உன்னத நிகழ்வு நேற்று மாலை (28) அல்-மனார் மத்திய கல்லூரி மர்ஹூம் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பேண்ட் வாத்தியத்தோடு மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நிகழ்வின் போது மனாரியன்ஸ் 95 (Ninety five) அமைப்பினரால் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் தமக்கு கற்பித்த ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
பாடசாலையின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீப், மரணித்த ஆசிரியர்களின் குடும்ப உறவினர்கள் உட்பட சுமார் 160 க்கும் மேற்பட்ட மனாரியன்ஸ் 95 (Ninety five) அமைப்பின் ஆண் , பெண் நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.