
வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல விகாரையில் நேற்று (28) மாலை மின்சாரம் துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்ததன் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பிக்குகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திம்புலாகல விகாரை வரலாற்றில் மின்சாரம் துண்டிக்கப்படுவது இதுவே முதல் தடவை என அதன் சேனாசன தலைவர் மில்லனே சிரியாலங்கார தெரிவித்துள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் காரணமாக விகாரைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுப்பதாக திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்திலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
திம்புலாகல விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கிங்ஸ் நெல்சன் எம்.பி. இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றின் மூலம் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.