யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபவனி

யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாபெரும் நடைபவனி இடம்பெற்றது.

இன்று (செவ்வாய்க்கிழமை)  துரையப்பா விளையாட்டரங்கில் இருந்து ஆரம்பமாகி குருநகர் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் நிறைவுற்றது.

இந்த பேரணியில் விரிவுரையாளர்கள், மாணவர்கள், உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை எதிர்வரும் 04.12.2022 அன்று தந்தை செல்வா கலையரங்கில் யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *