தீர்வு கிடைக்கும் வரை தோட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கிடையாது-கொந்தளித்தது இதோகா!

அக்கரைபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வு கட்டும் நோக்கில் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமாணிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று தொழில் அமைச்சில் நேற்று, 29ம் திகதி நடைபெற்றது.

அக்கரைபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தோட்டங்களில் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் சட்டத்தை மீறுவதுடன், தொழிலாளர்கள் பல மறைமுக பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதாக செந்தில் தொண்டமான் நிர்வாகத்தின் மீது பல குற்றங்களை முன்வைத்தார்.

மேலும் அனைத்து தோட்டங்களிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெற்றால் மாத்திரமே தோட்ட நிர்வாகம் வளமை போல் செயல்படுவதற்கு எமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார, அக்கரைபத்தனை   நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் பத்தாயிரம் தோட்ட தொழிலாளர்கள் வளமை போல் செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அக்கரைப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அவர்களின் வாழ்வில் எந்த இடையூறுகளையும் ஏற்படுத்தக் கூடாது. தொழிலாளர் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தொழில் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

Leave a Reply