நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – சுகாதார அமைச்சர்

நாட்டில் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தற்போதைய கணக்கெடுப்புகளின்படி, இந்த விடயம் குறித்து தெரியவந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, அதனை தடுப்பதற்கான விரைவான தீர்வுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply