நாட்டில் ரயில் சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

எதிர்வரும் 05ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ரயில் நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் களனிவௌி மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

ஏனைய மார்க்கங்களின் ரயில் நேர அட்டவணையும் கட்டம் கட்டமாக திருத்தியமைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது நிலவும் ஆளணிப் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

திணைக்களத்தில் காணப்படும் 8,000 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்ட போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் காரணமாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அழைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply