
மாத்தறை, பீக்வெல்ல, நில்வளா கங்கைக்கு அருகில் நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்துள்ளது.
குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு சோடிக் காலணிகள் குறித்த இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர் .
சடலத்தின் பாகங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.