யாழில் மணல் கடத்தல் கும்பல் தொடர்பாக விசேட அதிரடிப்படைக்கு தகவல் வழங்கிய 19 வயது இளைஞன் மீது தாக்குல் நடத்திய மணல் கடத்தல் கும்பல்!

மணல் கடத்தல் கும்பல் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் மணல் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 19 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய பவானந்தராசா தர்சியன் என்பவரே தாக்குதலில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் பருத்துறை ஆதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் விஷேட அதிரடிப் படையினர் அழைத்துச் சென்ற கப்ரக வாகனத்தின் உரிமையாளரும் சில இளைஞர்களும் இணைந்து குடத்தன் மேற்கில் இருந்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் பி.டரிசியன் (வயது 19) என்ற இளைஞனே காயமடைந்துள்ளார்.

Leave a Reply