தேசிய ரீதியில் கல்வியில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு கல்வி வலயம்

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.

நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதம்  23 ஆம் திகதி  முதல் ஜூன் மாதம்  01 ஆம் திகதி  வரை 3,845 பரீட்சை மையங்களில்  க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது. இதில்  5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்த நிலையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தேர்ச்சி பெற்று பாடசாலைகளுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில்,வெளியான பரீட்சை முடிவுகளின் படி இலங்கை வரலாற்றில் முதன்முறையாக,அதிக மாணவர்கள் சித்தியடைந்து (87.01 %)  மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது வலயமாக தெரிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ,2056 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ள நிலையில்,1789 மாணவர்கள் சித்தியடைந்து உயர் தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply