கிறிஸ்மஸ், புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு இல்லை

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டிசம்பரில் மின் தேவை முகாமைத்துவம் பற்றிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் 20 நிமிடங்களும் மின்வெட்டு டிசம்பர் 15ஆம் திகதி வரை தொடரும்.

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஒரு மணித்தியால இரவு நேர மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், டிசெம்பர் 15ஆம் திகதி நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை தேசிய மின்வட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு வேளைகளில் மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் நாடளாவிய ரீதியில் இரவு நேர மின்வெட்டு குறைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply