வடக்கில் கடும் மழை பெய்யும் சாத்தியம்

யாழ்ப்பாணம்,நவ 30

வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு எதிர்வரும் 05.12.2022 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனவே நாளை முதல் பரவலாக மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாண்டு இதுவரை 04 தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் உருவாகின. எனினும் ஒரு தாழமுக்கம் மட்டுமே எமக்கு மழையைத் தந்துள்ளது. இரண்டு தாழமுக்கங்கள் அவைக்கு அண்மையில் தோன்றிய உயரமுக்க நிலைமைகளால் தமது ஈரப்பதன் கொள்ளளவை இழந்து வரண்ட காற்றாகவே வீசின.

Leave a Reply