பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 9 பேர் பலி

பெஷாவர்,நவ 30

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுரங்க இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *