உலகில் மிக விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ பொதுமக்களுக்கு காட்சி

தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலையில், உலகின் மிக விஷமுள்ள பாம்புகள் உட்பட பல வகையான ஊர்வன, இறக்குமதி செய்யப்பட்டு பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் கொடிய விஷமுள்ள ‘சிவப்பு- விஷப் பாம்பு’ ஒரு சிறப்பு வாய்ந்தது.

இந்த இனம் கிழக்கு ஆபிரிக்காவின் அடர்ந்த காடுகளை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் விஷமுள்ள நாகப்பாம்பு ஆகும்.

இதன் ஆயுட்காலம் 15 – 20 ஆண்டுகள் என்பதோடு, நன்கு வளர்ந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டு காணப்படுகின்றது.

தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply