பலாங்கொடை பிரதேசத்தில் போசாக்கற்ற குழந்தைகள் அதிகரிப்பு!

பலாங்கொடை, கல்தோட்ட, பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குடியேற்ற பகுதியில் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக 11 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விவசாய குடியிருப்பில் இவ்வாறு போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இனம் காணப்பட்டுள்ளதாக பலாங்கொடை பிரதேச சபை தலைவர் சுனில் பேமஸ்ரீ, பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக அவர் கூடிய கவனம் செலுத்து உள்ளதாகவும், உடனடியாக இந்த விடயம் உரிய அதிகாரிகளை சென்றடையும், எனவும் விரைவாக இந்த ஆபத்தினை குறைக்க முடிவு எடுப்பேன், எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply