காரைதீவில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி!

சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் (Search for Common Ground)  நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில் இயங்கிவரும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கமானது சமாதான நல்லிணக்க முயற்சிகளில் பெண்களை வலுப்படுத்தல் எனும் செயற்றிட்டத்தின் கீழான வெற்றியை பகிர்ந்து கொள்ளும் தெளிவூட்டல் கருத்தரங்கும் நன்றி பகிர்தலும் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருள்  விற்பனை கண்காட்சியும் காரைதீவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றது.

 

வில்கிளப் தலைவிகளால் எழுதப்பட்ட முன்மொழிவுகளின் மூலம் பெற்றுக்கொண்ட நிதியை பயன்படுத்தி மேற்கொண்ட திட்;டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட வெற்றியின் விழாவாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.

 

பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

நிகழ்வில் சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான பொது ஆலோசகர் நளினி ரெட்ணராஜா மற்றும் கிராமின் பௌண்டேசன் அமைப்பின் பெண்கள் பொருளாதார வலுவூட்டல் ஆலோசகர் சுபாசினி  பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவியும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான அனுசியா சேனாதிராஜா அரங்க இணைப்பாளர் வாணி சைமன் திட்ட இணைப்பாளர் வாணி சுதா சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏஎம்எம்.நௌஷாட் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ஏசிஏ.அஸீஸ் தேசிய ஒளதடங்கள் கட்டுப்பாட்டுச்சபை வடக்கு கிழக்கு இணைப்பாளர் எம்எம்ஜிபிஎம்.றஷாட் அம்பாரை மாவட்ட தலைமையக சமுர்த்தி முகாமையாளர் ஏ.அசோக்குமார் உள்ளிட்ட வில்கிளப் தலைவிகள் உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் (Search for Common Ground)  நிறுவனத்தின் அனுசரணையுடன் கடந்த 3 வருடங்களாக பெண்களை பல்வேறு துறைகளிலும் வலுவூட்டும் பயிற்சி நெறிகள் திட்ட அறிக்கைகள் சமர்ப்பித்தல் அரசியலில் பெண்களின் வகிபாகம் அது தொடர்பான கலந்துரையாடல்கள் போன்ற செயற்பாடுகளை; பாதிப்புற்ற பெண்கள் அரங்கமானது மேற்கொண்டு வந்தது.

 

இதற்கமைவாக இடம்பெற்ற நிகழ்வில் திட்டநோக்கம் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நளினி ரெட்ணராஜாவினால் விளக்கமளிக்கப்பட்டது.

 

பின்னராக வில்கிளப்பின் ஊடாக பெண்கள் பெற்றுக்கொண்ட பயிற்சி நெறிக்கு அமைவாக வாழ்க்கையில் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் தொழில் முயற்சிகள் மூலம் மேற்கொண்ட சாதனைகள் தொடர்பிலும் வில்கிளப்பின் தலைவிகள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களினால் அனுபவ பகிர்வின் மூலம் இங்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

 

நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதியின் உரையில் அம்பாறை மாவட்டத்தில் இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டுவரும் பெண்கள் தொடர்பிலான செயற்பாடுகளை பாராட்டினார். மேலும் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுதே நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிய தேவை எனவும் கூறினார்.

 

இதேநேரம் இங்கு உரையாற்றிய அனைவரும் திட்டத்தினை முன்னெடுத்த அமைப்பினருக்கு நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

 

நிறைவாக பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் விற்பனை கண்காட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


Leave a Reply