மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் – நுவரெலியா-வலப்பனை நகரில் போராட்டம்!

நுவரெலியா – வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நில்தண்டாஹின்னா நகரில் ஏற்கனவே மதுபானசாலையொன்று உள்ள நிலையில், மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் சமூக நெருக்கடி – பிரச்சினைகள் உருவாகலாம் எனவும், இளைய சமூதாயம் சீரழிக்கப்படலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் நில்தண்டாஹின்னா நகரின் நிலை ஸ்தம்பிதமடைந்தது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

Leave a Reply