கடுகதி புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

கடுகதி புகையிரதத்துடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் பட்டா ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ் .அரியாலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply