ஆர்ப்பாட்டதாரர்கள் இருவர் ஜனாதிபதியை வணங்கி மன்னிப்பு கோரியது பொய்: ரதிந்து

ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த இரண்டு யூடியூப் செயலளர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரை சந்தித்து பணிந்து மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய் என்றும் போராட்டத்தின் முன்னணி தலைவரான ரதிந்து சேனாரத்ன தெரிவித்தார்.

இராஜ் வீரரத்ன என்ற பாடகர் கோனார எனும் போராட்டத்தை காட்டிக்கொடுத்த நபரின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலை மேற்கோள்காட்டி இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என ரதிந்து சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

மக்கள் அதிகாரம் இல்லாத தலைவரிடம் பணிந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு போராட்டக்காரர்கள் நிலைகுலைந்து போகவில்லை என்றும், இப்படி பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு மக்களின் எதிர்பார்ப்பை நசுக்கும் முயற்சிகள் மீண்டும் எழுச்சி பெறுவதாகவும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply