நவீன தொழிநுட்ப சாதனங்களை மாணவர்கள் கையாளும் விதம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்- திசாநாயக்க!

நவீன தொழிநுட்ப சாதனங்களை மாணவர்கள் கையாளும் போது அதன் சாதக பாதகங்களை தெளிவுபடுத்தி மாணவர்கள் அதனை கையாளும் முறைமை குறித்து அவதானத்தை செலுத்தல் காலத்தின் தேவையாக அமைவதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி.திசாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (31)திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் தேசிய வாசிப்பு மாத த்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனோதே மேற்குறித்தவாறு தெரிவித்தார். 

குறித்த போட்டி நிகழ்ச்சிகளில் சுமார் 500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் அவற்றுள் முதல் மூன்று இடங்களை தட்டிச்சென்ற 174மாணவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் சந்துன் ரட்நாயக்கவின் ஒழுங்கமைப்பில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதேச சபையின் தவிசாளர்கள் மூவர் இதன்போது அவர்கள் மேற்கொண்ட மக்கள் சேவைக்காக கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பார்த்தீபன் சூரியகுமார், மொரவெவ, தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர்கள், அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply