நாட்டின் எதிர்கால ஆளுமை பலத்தை அதிகரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவும், ஒரு மனிதனின் ஆளுமை மற்றும் செயற்பாடுகளை அழிக்கின்ற செயற்பாட்டுக்கு அதீதமாகவும் நிதி ஒதுக்கீடு செயற்பட்டுள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி வெறுமனே கண்துடைப்பு செயற்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இன்று சபையில் சுட்டிக்காட்டினார்.
அதே போன்று ஒவ்வொரு அரசாங்கமும் மாறும் போது கல்விக் கொள்கைகள் மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.