கொரோனாத் தொற்று முதியவர் உயிரிழப்பு!

தென்மராட்சி பிரதேசத்தில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி 80 வயது முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவருடன் சேர்த்து 60 பேர் வரையில் இதுவரை தென்மராட்சியில் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த முதியவரின் மகனின் குடும்பத்தார் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென உடல் நலக் குறைவால் முதியவர் நேற்றுக் காலை உயிரிழந்தார்.

திடீர் உயிரிழப்பையடுத்து சுகாதாரப் பகுதியினர் அவருக்கு அன்டிஜென் சோதனை முன்னெடுத்தபோது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply