மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் திங்கட்கிழமை ஆரம்பம்

அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 3 ஆம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

2ஆம் தவணை வியாழன் (1) மற்றும் வெள்ளிக்கிழமை (2) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலித எகொடவல தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி தொடங்கும், மேலும் பாடசாலைகள் 2023 ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

அதன், உயர்தரப் பரீட்சைக்காக 2023 ஜனவரி 20 முதல் பெப்ரவரி 20 வரை ஒரு மாதத்திற்கு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 3ஆம் தவணை மார்ச் 24ஆம் திகதியுடன் ய முடிவடைகிறது.

Leave a Reply