ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நெய்ல் பிரகாஸ் நாடு கடத்தப்பட்டார்!

துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நெய்ல் பிரகாசை அதிகாரிகள் இன்று டார்வின் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

நெய்ல் பிரகாசிற்கு எதிராக அதிகாரிகள் ஆறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

ரப் கலைஞரான 31 வயது நெய்ல் பிரகாஸ் 2014 இல் ஐஎஸ் அமைப்புடன் இணைந்தார்.2016 இல் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இவர் சிரியா சென்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பிரகாசிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இதேவேளை நெய்ல் பிரகாசை ஒன்பதாம் திகதிக்கு முன்னர் நொதேர்ன் டெரிட்டரியிலிருந்து விக்டோரியாவிற்கு மாற்றுவதற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

விக்டோரியா காவல்துறையினர் நெய்ல் பிரகாசை மெல்பேர்னிற்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அவர் தொடர்ந்தும் டார்வினில் தடுத்துவைக்கப்படுவார்.

பால்மேர்ஸ்டன் கண்காணிப்பு இல்லத்திலிருந்து வீடியோவில் தோன்றிய நெய்ல்பிரகாஸ் விசாரணையின் போது கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

தனது சார்பில் எவரும் வாதிடுவதை விரும்பாத அவர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு நீதிபதி வேண்டுகோள் விடுத்தவேளை அமைதியாக காணப்பட்டார்.

தழும்புகள் மற்றும் டட்டுக்கள் மூலம் நெய்ல் பிரகாசை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply