மழையின்மையால் உழுந்து செய்கையாளர்கள் பாதிப்பு!

வவுனியாவில் கடந்த 20 நாட்களாக மழை இன்மையால் உழுந்து செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 5500 கெக்டெயருக்எஉம் அதிகமாக உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன நிலையில் மழையின்மை விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.

கடந்த காலங்களில் 4000 ரூபாவுக்கு உழவு பணம் கொடுத்து 400 முதல் 500 ரூபாவுக்கு விதை உழுந்து பெறக்கூடிய நிலை காணப்பட்ட போதிலும் தற்போது 15000 ரூபா உழவுப்பணமாகவும் 1100 முதல் 1200 வரை விதை உழுந்து கொள்வனவு செய்தே செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply