பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டியம் நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இன்றையதினம் வலி. மேற்கு பிரதேச சபையிக்கு முன்னால், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் “ஒன்றுபடுவோம் பெண்கள் உரிமையை வென்றெடுப்போம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் வாகனங்கள் மற்றும் சுவர்களில் விழிப்புணர்வு சுவர் பத்திரிகைகள் ஒட்டப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது போதைவஸ்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு காணப்படுகிறது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவேண்டும் என்றால் போதைவஸ்து ஒழிக்கப்பட வேண்டும். போதையை ஒழித்தால் பெண்கள் மற்றும் சிறுமவர்களுக்கு எதிரான வன்முறைகள் தானாகவே இல்லாமல் போய்விடும்.

பெண்களே உங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக நீங்களே எழுந்து வந்து போராட வேண்டும் – என்றனர்.

இந்த போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply