இலங்கைப் பிரஜையை காக்க முயன்றவருக்கு உயரிய விருது

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜையைக் காப்பாற்ற முயன்ற நபருக்கு பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் துணிச்சலுக்கான இரண்டாவது உயரிய சிவில் விருதான தம்கா ஐ ஷுஜாத் வழங்கப்படவுள்ளது.

இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

சியால்கோட் கொலைச் சம்பவத்தின் போது தியவதனகே டான் நந்தஸ்ரீ பிரியந்தவை கொலைக் கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாலிக் அட்னான் முயற்சிப்பதைக் காட்டும் காட்சிககள் வெளியாகியிருந்தன.

பிரியந்தவுக்கு அடைக்கலம் அளித்து காப்பாற்ற முயன்ற மலிக் அட்னானின் தார்மீக தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் தேசத்தின் சார்பாக நான் வணக்கம் தெரிவிக்க விரும்புகிறேன்.

சியால்கோட்டில் பாதிக்கப்பட்டவரைக் காக்க உடல்ரீதியாக முயற்சித்த அவருக்கு தம்கா ஐ ஷுஜாத் விருது வழங்குவோம். என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply