மாவீரர் நினைவேந்தல்: கோடிக்கணக்கில் பணம் வசூலித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்?

யாழ்ப்பாணம், மார்ச் 3: நடந்து முடிந்த மாவீரர் நினைவேந்தலுக்காக, புலம்பெயர் நாடுகளில் கோடிக்கணக்கான பணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வசூல் செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் கூறுகையில் “இந்த நினைவேந்தலை செய்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு Tamil Cordinating Committee Australia வில் இருந்து 10 இலட்சம், மண்வாசனை கனடா அமைப்பு மூலம் 15 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், யாழ்.மாநகர மேயர் வி. மணிவண்ணனுக்கு Canadian Tamil Organisation 10 லட்சம், HQ Group british 5 இலட்சம் வழங்கியுள்ளது. அதேபோல, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரனுக்கு 20 இலட்சம், செம்பகம் தமிழ் தேசிய செயற்பாட்டுக் குழுவிற்கு 01 இலட்சம், தாயக விருச்சத்திற்கு 65 இலட்சம், இப்படி மூன்றரை கோடிக்கு மேற்பட்ட பணம் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியினருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அர்த்தமில்லாத யுத்தம் ஒன்றில் ஈடுபட்டு தோல்வி அடைந்திருக்கின்றது. அந்த தோல்வி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தோல்வி என்ற எண்ணக்கருவொன்றை தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்கள் மத்தியில் விதைப்பதற்கான ஒரு முயற்சி தான் இந்த நினைவேந்தல்கள். இந்த நினைவேந்தல்களை வியாபாரமாக தமிழ் அரசியல்வாதிகளால் பல்லாண்டு காலமாகச் செய்யப்பட்டு வருகின்றது. எந்தவித சித்தார்ந்த அறிவும் இல்லாமல் அரசியல்வாதிகளின் உசுப்பேத்தல்கள் ஊடாக ஆயுதம் தூக்கிய இளைஞர், யுவதிகள் இறந்து போனார்கள்.

அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் இன்று அநாதைகள் ஆக்கப்பட்டு, கஸ்டப்பட்டு, வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சில முன்னாள் ஆயுததாரிகளின் பெற்றோர்கள் பிச்சை எடுப்பதாகக் கூட செய்திகள் இருக்கின்றது.

அவ்வாறு இருக்கும் போது, ஆயுதம் தூக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்காவது, தாங்கள் சேர்த்த பணத்தில் ஒரு தொகையை வழங்கியிருக்கலாம். அவ்வாறில்லாம் இந்த நினைவேந்தல்கள் முழுமையாக இந்த அரசியல்வாதிகளின் காசு உழைக்கும் நோக்கமாகத்தான் செய்யப்படுகின்றது.

ஆயுதங்கள் தூக்கி மரணித்துப் போனவர்கள் சாதாரண, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், இந்த அர்த்தமில்லாத, அடைய முடியாத இலக்குக்கு இந்த அரசியல்வாதிகளினால் உசுப்பேத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்று சிதைந்துபோய் இருக்கின்றது. இவர்களை வைத்து இந்த அரசியல்வாதிகள் 73,74 வருடங்களாக காசு உழைக்கின்றார்கள் என்றார் அவர்.

Leave a Reply