நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வென்னப்புவ, பொரலஸ்ஸ ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 10 ஆம் கல்வி கற்கும் மாணவன், சந்தலங்காவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாகந்துறையில் உள்ள தனியார் வகுப்பில் இருந்து 80 பேர் கொண்ட பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், சக மாணவர்களுடன் குறித்த பாடசாலை மாணவன் குளத்தில் நீராடிய போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply