மொட்டு கட்சி உறுப்பினர் வீட்டிலும் எரிவாயு கசிவு

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் வீட்டிலும் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறும் சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது வீட்டிற்கு புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றை கொள்வனவு செய்த போது குறித்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தனது குடும்பத்தினர் எரிவாயுவை பயன்படுத்த அச்சப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் வீட்டிலும் சமையல் எரிவாயு கசிவு சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply