கிளனனோர் தோட்ட பிரச்சினைக்கு தீர்வு!

Bookmark and Share

கிளனனோர் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கிளனனோர் தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,

1. தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம். – முழு சம்பளம் வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

2. வலுக்கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டது. – 20 கிலோ வலுக்கட்டாயமாக நிர்ணயிக்க முடியாது எனவும், தேயிலை மலைகளுக்கு ஏற்ற வகையிலே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், 20 கிலோவாக இருந்த அடிப்படை தொகை 16 கிலோவாக குறைக்கப்பட்டது.

3. ஒவ்வொரு நிலுவைக்கும் வலுக்கட்டாயமாக 3 கிலோ தேயிலை குறைப்பு. – நாளை முதல் 1 கிலோவாக மாற்றி அமைக்கப்பட்டது.

4. ஞாயிறு மற்றும் பௌர்ணமி நாட்கள் 1 1/2 சம்பளம் வழங்கப்படவில்லை. – தற்போது வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

5. நிபந்தனை, ஓய்வூதியத் தொழிலாளர்களுக்கு கைகாசு அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. – இனிவரும் காலங்களில் முழு சம்பளமாக வழங்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தோட்ட நிர்வாகத்தால் வழங்கபட்ட ஒப்புதலை ஏற்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தில் இருந்து தேயிலை தூளை ஏற்றுமதிக்கு வெளியேற்ற அனுமதி வழங்கியது.

Leave a Reply