பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டதையடுத்துஇ தங்காலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 29ம் திகதி இரவு, அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
முதலில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என மேலும் தெரிவித்துள்ளதுடன் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை பெரமுனவின் பொதுவேட்பாளராக முன்னிறுத்த முடியும் எனவும், அதுவே பெரமுனவின் உத்தியோகபூர்வ கருத்தாக இனிமேல் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
பொதுஜன பெரமுன கட்சி முழுமையாக நாமலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் தாவியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.