ஆனையிறவு உப்பளம் இயங்குவதில் எனக்கு திருப்தி இல்லை…! அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு…!

ஆனையிறவு உப்பளம் இயங்குவதில் எனக்கு திருப்தி இல்லை எனவும்,பரந்தன் தொழிற்சாலையை இயங்க வைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி இன்று(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனையிறவு உப்பளத்தை அரசாங்கம் பொறுப்பெடுத்து இயக்குகின்றது. அதில் எனக்கு திருப்தி இல்லை. அதனை மே்படுத்த வேண்டும். 

அத்துடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலை, யுத்தத்தினால் முழுமையாக செயலிழந்துள்ளது.

அதனை இயக்குவதற்கு ஏற்றதாக இல்லை. அடுத்து வரும் காலங்களில் குறித்த தொழிற்சாலையையும் மீள இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *