“சமத்துவமான உலகத்தை மாற்றுவதில் புதுமையின் பங்கு ” என்ற தொனிப்பொருளினகீழ் இந்த ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னெடுப்பு!

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உள்ளடக்கிய அபிவிருத்திக்கான உருமாற்ற தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமத்துவமான உலகத்தை மாற்றுவதில் புதுமையின் பங்கு ” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் சுகாதாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டமும் வகுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply