வாழைச்சேனையில் போதைப்பொருளுடன் பெண் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்னொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து 01 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 08கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி கைப்பற்றப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 25000ரூபா எனவும் ஹெரோயின் பெறுமதி 400000ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply