இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் விமானம் மோதி இன்றுடன் 48 வருடங்கள்

இலங்கையின் மஸ்கெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள சப்த கன்யா (நக்கில்ஸ் மலைத்தொடர்) சிகரத்தில் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம்பெற்று இன்றுடன் (04) 48 வருடங்கள் ஆகின்றன.

கடந்த அரை நூற்றாண்டில் இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்திலும் மலேசிய விமானம் ஒன்றே தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1974 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி மலேசியாவில் இருந்து மக்கா நோக்கி புனிதயாத்திரை சென்ற யாத்திரிகர்களுடன் குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
கிழக்கு ஜாவாவின் ஜுவான்டா (Juanda) சர்வதேச விமான நிலையத்திலிருந்து 182 பயணிகள், விமானிகள் உட்பட 9 விமான பணியாளர்களுடன் பயணத்தை ஆரம்பித்த PH-MBH என்ற பதிவிலக்கத்தைக் கொண்ட McDonnell Douglas DC-8-55CF விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் நோக்கில் தாழ்வாக பறந்த போது எதிர்பாராதவிதமான அனர்த்தத்தை எதிர்கொண்டது.
இந்த அசம்பாவிதத்தின் போது 191 பேரும் சப்த கன்யா மலையடிவாரத்தில் மண்ணுள் புதையுண்டதன் காரணமாக துரதிஷ்டவசமாக எந்தவொரு உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனது.

உலகையே உலுக்கிய இந்த அனர்த்தம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

டச்சு விமான நிறுவனமான Martinair சேவையின் 138 வது விமானமான இது கருடா இந்தோனேசியா சார்பாக இயக்கப்பட்ட ஒரு பட்டய விமானமாகும். (chartered flight)
சுரபயா விமான நிலையத்திலிருந்து UTC 12.03 (UTC -உலகளாவிய நேர ஒருங்கிணைப்பு) க்கு சவுதி அரேபியாவின் ஜித்தா நோக்கி புறப்பட்டு, வழியில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரோ ஏர் 1285 மற்றும் நைஜீரியா ஏர்வேஸ் 2120 விமான அனர்த்தங்களுக்கு பின்னர் டிசி-8 விமானம் ஒன்று சம்பந்தப்பட்ட மூன்றாவது மிக மோசமான விபத்து இதுவாகும்.
அக்காலத்தில் இந்த சம்பவம் உலகின் இரண்டாவது மோசமான விமான விபத்தாக கருதப்பட்டது.

விமானத்தில் இருந்த தலைமை விமானி ஹென்ட்ரிக் லாம், முதல் விமானி ரொபர்ட் ப்லோம்ஸ்மா, விமானப் பொறியாளர் ஜோஹன்னஸ் விஜ்னாண்ட்ஸ், வழித்தட கண்காணிப்பாளர் இங்க்ரிட் வேன் டி வில்லட் மற்றும் விமானப் பணியாளர்கள் ஹென்றிட்டா போர்ஹோல்ட்ஸ், அப்துல் ஹமீத் உஸ்மான், லிலிக் ஹெராவதி, டிடியா ஹாம்பர்க், டிஜ் டிக்வான் ஆகியோரும் உயிரிழந்தனர்.

விமான நிலையத்திற்கான தூரத்தை விமானிகள் தவறாகக் கணித்து, குறைந்தபட்ச பாதுகாப்பான உயரத்தை விட கீழே இறங்கிய போது, தரையுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக விமான ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, விமானத்தில் உள்ள டொப்ளர் மற்றும் வானிலை ராடார் அமைப்புகளை நம்பியதன் காரணமாக விமானிகள் இந்த தூரக் கணிப்பை தவறான விளக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேஷியர்கள் என்பதுடன், விபத்து நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் நோட்டன் பிரிஜ் பகுதியில் ஒரு நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல சிங்கள பாடகர் என்டன் ஜோன்ஸ் என்பவருடன் இந்த அனர்த்தத்தை நினைவுகூரும் விதமாக “கந்தே ஹெப்புனு மஹா வனாந்தரே” என்று பாடல் ஒன்றை வெளியிட்டார்.

Leave a Reply