யாழ். மாவட்ட வடிகாலமைப்பு திட்டத்தில் பாரிய நிதி மோசடி!

தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வடிகாலமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 1,870 மில்லியன் ரூபாயில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த அவர், நகர அபிவிருத்தி அதிகார சபையும், யாழ்ப்பாண மாநகர சபையும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply