பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள பணிப்புரை

கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

கிராமங்களில் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply