மண்ணின் வளம், வாழ்வதற்கான இருப்பை கேள்விக்குள்ளாக்கும் பாத்தீனியம்!

சுற்றுப்புறச்சூழலில் வளர்ந்து இருக்கின்ற பாத்தீனியம் என்ற செடியினை யாரும் கண்டுகொள்ளுவதில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் எங்கள் மண்ணினுடைய வளத்தினை சேதப்படுத்துவதோடு மாத்திரமின்றி வாழ்வதற்கான எங்களுடைய இருப்பையும் கேள்விக்குள்ளாகின்றது என சமூக செயற்பாட்டாளரும், ஆசிரியருமான கௌரி தெரிவித்தார்.

சமூகம் மீடியாவுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

டிசம்பர் 5 ஆம் திகதி உலக மண் தினம். இதனை முன்னிட்டு மண்ணினை பாதுகாக்கின்ற செயற்பாடாக, அதுமட்டுமன்றி பாதீனியம் ஒழிப்பு என்ற ரீதியில் சிறகுகள் அமைப்பும், எழுதிரளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடலில் நாங்கள் பங்கு பற்றியிருந்தோம்.

சுற்றுப்புறச்சூழலில் வளர்ந்து இருக்கின்ற பாத்தீனியம் என்ற செடியினை யாரும் கண்டுகொள்ளுவதில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் எங்கள் மண்ணினுடைய வளத்தினை சேதப்படுத்துவதோடு மாத்திரமின்றி வாழ்வதற்கான எங்களுடைய இருப்பையும் கேள்விக்குள்ளாகின்றது.

இந்த சிந்தனை அனைவருக்கும் போய் சேர வேண்டும், சட்டத்தின் மூலமோ அல்லது நிறுவனங்களின் அழுத்தங்களாலலேயோ இதனை செயற்படுத்த முடியாது.

நாங்கள் ஒவ்வொருவரும் நாங்களாக அதன் தாக்கங்களை உணர்ந்துகொண்டு அதனை அளிப்பதற்கான செயற்பாட்டினை முன்னெடுப்போமாக இருந்தால் அதனை நாங்கள் வெற்றி கொள்ளலாம். மண்ணை பாதுகாப்பதுடன் ஊடாக எங்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.- என்றார்.

சுஜீவன் தர்மரட்ணம் 

சிறகுகள் அமைப்பில் பல்வேறு கல்வி சார்ந்து செயற்பாடுகளை செய்து வருகிறோம். இன்று, மண் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். அந்தவகையில் எங்கள் தமிழர் தாயகத்தினை பொறுத்தவரையில் பாதீனியம் என்பது மிக முக்கியமான பிரச்சனையாக காணப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக பல குரல்கள் எழுப்பப்பட்டு வந்தாலும் கதைகளாகவே பல விடயங்களை கடந்திருக்கிறோம். இது ஒரு சின்ன ஆரம்பமாக சேர்ந்து செயற்படுவோம். இது சார்ந்து சில நடவடிக்கைளை மேற்கொள்வோம் என்று இந்த கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தோம்.

இதனை மக்கள் இயக்கமாக உருவாக்குவதற்கு அடித்தளத்தினை இன்று நாம் இட்டிருக்கிறோம். பாத்தீனியம் தொடர்பில் பல்வேறு தளங்களில் வேலை செய்யும் அனைவரினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிறோம். எல்லோரும் ஒன்று கூடினால் தான் ஒரு தேசிய செயற்திட்டமாக இந்த பாத்தீனியத்துக்கு எதிரான செயற்திட்டத்தினை செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக வட மாகாணத்தில் இருக்கின்ற பாடசாலைகள் நோக்கி பாத்தீனியம் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ள இருக்கிறோம். அதனை தொடர்ந்து சனசமூக நிலையங்கள், கோவில்கள், தேவாலயங்களை சார்ந்த பிரதேசங்களோடு மக்கள் மயப்படுத்தப்பட்டு பாத்தீனியத்தின் தாக்கங்களை மக்களுக்கு அறிவுறுத்துவதன் ஊடாக ஏன் எங்கள் மண்ணை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தினை கொண்டு செலாவது தான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. இதுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் வேண்டும்.- என்றார்.

Leave a Reply