கூட்டுறவு சங்க சமாச தலைவர் சி.சிவச்செல்வன்

ஊர்காவற்துறை பிரதேசத்தில் கடல் அட்டை வேண்டாம்,இந்த நிலை நீடித்தால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் சி.சிவச்செல்வன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது பிரதேசத்தில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு யாரும் அரச அதிகாரிகள் அனுமதி வழங்காத நிலையில்,பண்ணை அமைப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருகிறது.
களப்பு தொழிலை நம்பி தொழில் செய்யும் ஊர்காவற்துறை கடல் தொழிலாளர்களை பற்றி யாரும் சிந்திக்கவில்லை.முதலில் அங்குள்ள மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.எரிபொருள் விலையேற்றத்தால் இப்போது பலர் வள்ளங்களை பயன்படுத்தி தொழில் செய்கின்றனர்.

இந்த நிலையில் அதிகளவான கடல் அட்டை பண்ணைகளை அங்கு அமைத்தால் உள்ளூர் மக்கள் தொழில் செய்ய முடியாது.தொழிலும் உழைப்பும் இல்லையென்றால் அங்கு இருந்து மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

துறை சார்ந்த அதிகாரிகள் மறைமுகமாக பண்ணைக்கு அனுமதி வழங்கி வருகின்றனர்.நாளாந்தம் 700 தொழிலாளர்கள்  இந்த களப்பு கடலை நம்பி வாழ்கின்றனர்.கடல் அட்டை பண்ணை வேண்டாம் என மக்கள் போராட்டம் நடாத்தியுள்ளனர்.இதன் போது பிரதேச செயலலருக்கும் மகஜர் வழங்கியுள்ளனர்.பண்ணைகளை அமைப்பதற்கு தான் அனுமதி வழங்கவில்லை என பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.இது என்ன நடக்கிறது என்று எமக்கு புரியவில்லை.எமக்கு அட்டை பண்ணை வேண்டாம் என்றார்.

Leave a Reply