கச்சா எண்ணெய் உற்பத்தியில் மாற்றம் இல்லை எண்ணெய் உற்பத்தி நாடுகள் முடிவு

உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 60 டாலராக குறைக்க ஐரோப்பிய கூட்டமைப்பும் மற்றும் ‘ஜி-7’ நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்த விலைக் குறைப்பும், ஏற்கெனவே ரஷிய கச்சா எண்ணெயை கடல்வழியாக ஏற்றுமதி செய்வது, அத்தகைய வா்த்தகத்துக்கான காப்பீடு மேற்கொள்வது ஆகிவற்றுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பும் விதித்துள்ள தடையும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.

இந்த நிலையில் சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அமைப்பின் (ஒபெக்) கூட்டம் நேற்று நடந்தது. இந்த அமைப்பில் ரஷியாவும் உறுப்பினராக இருக்கும் சூழலில் கச்சா எண்ணெயின் உற்பத்தியை குறைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்றும், இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரலாம் என்றும் கருதப்பட்டன. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த மாற்றமும் செய்வதில்லை எனவும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தொடரவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Reply