தென்மாகாணத்திலுள்ள காலி,மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் ஜனனி வேலைத்திட்டத்தினோர் அங்கமாக இந்த விஐயம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த குழுவினர் யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினர்.