
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு வாக்குகளும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எட்டு வாக்குகளும் பதிவானது. 15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகரசபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழரசுக் கட்சியின் 4 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒருவருமாக வாக்களித்தனர்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 பேரும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒருவரும் வாக்களித்தனர்.
பருத்தித்துறை நகரசபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒரு ஆசனங்களையும் கொண்டுள்ளது.





